Abspielen

Kein Wunder,
dass ich nicht wachse

von Achim Bröger

Abspielen

நான் வளரவில்லை
என்பதில் அதிசயமில்லை

எழுதியவர்: அஃஹிம் புரொய்கர்

Illustration: Julius Thesing
Sprecher Deutsch: Stephan Niemand
Übersetzerin Tamil: Radha Inthirarajah
Sprecherin Tamil: Thaveswary Tharmaseelan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0

 

Abspielen

Der Prinz ging im Palast spazieren.

Diener verbeugten sich und sagten: „Guten Morgen, Herr Prinz.“

Und sie dachten: Er sieht ja wirklich nett aus. Aber er ist einfach nicht groß genug.

 

Abspielen

இளவரசர் அரண்மனையில் நடக்கச் சென்றார்.

சேவகர்கள் பணிந்து வணங்கியபடி „வணக்கம் இளவரசர் அவர்களே“ எனக் கூறினார்கள்.

அத்துடன் அவர்கள் மனதிற்குள் இவ்வாறு நினைத்தனர்: உண்மையில் இவர் அன்பானவராகத் தெரிகிறார், ஆனால் இவருக்கு போதுமான அளவு  உயரமில்லை.

Abspielen


Im Spiegelsaal sah sich der Prinz dann selbst, und er dachte: Später wird man Königliche Hoheit zu mir sagen.

Aber wenn ich nicht schnell wachse, lachen sie heimlich und denken:

Komisch, dass wir diesen Zwerg Königliche Hoheit nennen müssen.

Königliche Kleinheit würde viel besser zu ihm passen.

Abspielen

அப்பொழுது கண்ணாடி மண்டபத்தில் தன்னைப் பார்த்தபடி இளவரசர் யோசித்தார்: பிற்காலத்தில் இவர்கள் என்னை மகாராஜா என்று அழைக்கவேண்டி வருமே.

ஆனால் நான் விரைவாக வளராவிட்டால், அவர்கள் மனதிற்குள் சிரிப்பதுடன் இப்படியும் நினைப்பார்கள்:

என்ன வேடிக்கை, நாங்கள் இந்தக் குள்ள அரசரை மகாராஜா என்று  அழைக்க வேண்டியுள்ளதே!

குள்ளராஜா என்று அழைப்பதே  இவருக்கு மிகமிகப் பொருத்தமாக இருக்கும்.

Abspielen

Der Prinz bekam Unterricht in allen wichtigen Königsfächern. Krone auf dem Kopf tragen war eines davon.

Leider rutschte ihm auch seine extra kleine Übungskrone immer wieder über die Stirn und ins Gesicht.

 

Königlich sah das überhaupt nicht aus, wenn das goldene Ding schief herumhing.
Auch auf dem Thron sitzen, befehlen, raffiniert sein und solche Dinge lernte er.

 

Abspielen

இளவரசருக்கு முக்கியமாக அரசியல் தொடர்பான எல்லாப் பாடங்களிலும் கல்வி போதிக்கப்பட்டது. தலையில் கிரீடம் அணிதல் அவற்றில் ஒன்றாகும்.

மிகச் சிறிய அளவிலான பழகும் கிரீடம் எப்பொழுதும் அவருடைய தலையிலிருந்து வழுகி வழுகி நெற்றிக்கும் முகத்திற்கும்  வந்துகொண்டிருந்தது.

அந்தத் தங்கப் பொருள் ஒன்று கோணலாகத் தொங்கிக் கொண்டிருந்ததால், அது அரச தோற்றத்தைக் கொடுக்கவில்லை. அரியணையில் வீற்றிருத்தல், கட்டளையிடுதல், தந்திரமாக செயற்படுதல் போன்ற விடயங்களையும் கற்றுக்கொண்டார்.

Abspielen

Nach dem Unterricht durfte er im riesigen Palastgarten spielen.

So groß war der, dass der Prinz noch nie bis zur Gartenmauer gekommen war.

Leider musste er auch beim Spielen die Krone aufbehalten.

Und leider gab es außer ihm keine Kinder im Palast und im Garten, mit denen er spielen konnte.

Abspielen

கல்வி நேரம் முடிந்தபின் அந்தப் பென்னம் பெரிய அரண்மனைத் தோட்டத்தில் விளையாடுவதற்கு அனுமதி கிடைத்தது.
அந்தத் தோட்டம் மிகவும் பெரியதாக இருந்ததால், அவர் ஒருதரமும் சுற்றுச்சுவர் வரை செல்லவில்லை.

கவலை என்னவென்றால் அவர் விளையாடும்போதும் கிரீடத்தை அணிந்திருக்க வேண்டியிருந்தது.

வேறு சிறுவர்கள் ஒருவரும் அந்த அரண்மனையிலோ தோட்டத்திலோ இல்லை என்பது வருந்தத்தக்கது, இருந்திருந்தால்  அவர்களுடன் சேர்ந்து அவர் விளையாடலாம்.

Abspielen

Prächtig und streng saß sein Vater, der König, auf dem Thron.

Von da oben beobachtete er seinen Sohn und sagte: „Das Land ist riesig und schwer zu regieren.

Es hat viele Feinde und braucht einen großen König.

Du musst also groß und stark werden und schlau natürlich auch.“

Abspielen

அவருடைய தந்தையான அரசர் பெருமிதத்துடனும் கடுமையுடனும் அரியணையில் அமர்ந்திருந்தார்.
மேலே இருந்த வண்ணம் தனது மகனை அவதானித்துக் கொண்டிருந்த அவர் கூறினார்:

„இந்த நாடு மிகவும் பெரியது, அத்துடன் இதை ஆட்சி செய்வது மிகவும் கடினம்.
இங்கே அதிகமான பகைவர்கள் இருப்பதாலும் எமக்கு ஒரு பெரிய அரசன் தேவை.

எனவே நீ உயரமாகவும் பலசாலியாகவும் அத்துடன் புத்திசாதுர்யம் நிறைந்தவனாகவும் இருக்க வேண்டும்.“

Abspielen

Der kleine Prinz dachte: So was Tolles will ich nicht werden, Krone tragen macht keinen Spaß.

Das Ding drückt mich zusammen.

Sagen durfte er das alles nicht.

Sein Vater, der König, hätte sich die Haare gerauft, und das war schwierig für ihn, denn er hatte nur noch wenige.

Abspielen

சிறிய இளவரசர் இவ்வாறு எண்ணினார்: இந்தச் சிறப்புகளையடைய எனக்கு விருப்பமில்லை, அத்துடன் கிரீடம் அணிவதில் எனக்கு மகிழ்ச்சியுமில்லை.

இந்தக் கிரீடம் என்னை அழுத்திக்கொண்டிருக்கிறது.
அவரால் எல்லாக் கருத்துகளையும் கூறமுடியாது.

அரசர் இதை அறிந்தால் தலைமுடியை பிய்த்துக் கொள்ளுவார்.   கடினம் என்னவென்றால் அதற்குக்கூட அவரிடம் குறைவான முடியே இருந்தது.

 

Abspielen

Oft rief der König den Diener mit einer Messlatte.

Aber immer wieder stellte der fest: „Nein, der Prinz wächst nicht.“

Da bekam der König jedes Mal einen Wutanfall.

Abspielen

சேவகரை அளவு கோலை எடுத்து வரும்படி அடிக்கடி அரசர் அழைத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அரசர்: „இல்லை, இளவரசர் வளரவேயில்லை“  என்று திரும்பத் திரும்ப முடிவெடுத்தார்.

ஒவ்வொரு தடவையும் அரசர் ஆத்திரமடைந்தார்.

Abspielen

Und schließlich befahl er: „Gespielt wird erst wieder, wenn du gewachsen bist. Und sieh nicht so verträumt in die Gegend. Streng dich an.“

Aber der Prinz unter seiner goldenen Krone wuchs keinen Millimeter. Die Laune des Königs wurde deswegen immer miserabler.

Abspielen

இறுதியில் அவர் இவ்வாறு கட்டளையிட்டார்: „நீ வளர்ந்தபின் தான் விளையாடச் செல்லலாம். அத்துடன் அங்கும் இங்கும் பிராக்குப் பார்த்துக் கொண்டும் கனவு கண்டு கொண்டும் திரியாமல் வளர முயற்சி செய்.“
ஆனால் அவரது தலைக்கு மேலே தங்கக் கிரீடம் இருந்ததால் ஒரு மில்லிமீற்றர் கூட வளரவில்லை. இதனால் அரசரது மனநிலை மேலும் மோசமடைந்தது.

Abspielen

Da sagte die Königin eines Tages: „Herr König, so geht´s nicht mehr weiter.

Vielleicht hilft Kronetragen an der frischen Luft.

Es könnte ja sein, dass er dann wächst.“

Der König wackelte unschlüssig mit dem Kopf.

Dann brummte er: „Na, meinetwegen. Hauptsache, er wächst endlich.“

Abspielen

ஒரு நாள் அரசி இவ்வாறு கூறினார்: „அரசர் அவர்களே! இப்படிப் போனால் சரிவராது.

சிலவேளை  வெளிக்காற்றில் கிரீடம் அணிந்தால் சரிவரலாம்.

இதனால் அவர் வளருவது, சாத்தியமாகலாம்.“

அரசர் தயக்கத்துடன் தலையை ஆட்டினார்.

„எப்படியென்றாலும் முடிவில் அவர் வளருவதுதான் முக்கியம்,“ என்று அவர் முணுமுணுத்தார்.

Abspielen

Lange Spaziergänge machte der Prinz jetzt. Eines Tages ging er so weit wie noch nie. Er kam an duftenden Blumen vorbei und an Sträuchern mit bunten Blüten. Heiß war es.

Die Krone drückte auf seinen Kopf.
Plötzlich stand er vor einer Mauer.

Dahinter hörte er Geräusche. Lachen und schnelle Schritte. Und weil kein königlicher Aufpasser in der Nähe war, kletterte er über die Mauer.

Abspielen

இளவரசர் இப்பொழுது நீண்டதூரம் நடக்கச் சென்றார். ஒரு நாள் அவர் ஒருகாலமும் இல்லாதவாறு நீண்டதூரம் சென்றார். அவர் நறுமணம் பரப்பும் மலர்களையும் வண்ணப் பூவிதழ்களைக் கொண்ட

செடிகளையும் கடந்து சென்றார். நல்ல வெப்பமாக இருந்தது. கிரீடம் அவரது தலையை அழுத்தியது. திடீரென்று அவர் சுற்றுச்சுவர் ஒன்றின் முன்னால் நின்றார். 
அதற்குப் பின்புறத்திலிருந்து சத்தம் கேட்டது. வேகமான காலடிச் சத்தமும் சிரிப்பொலியுமாகும். அரச பாதுகாவலர் அருகில் இல்லாதிருந்ததால், அவர் சுற்றுச்சுவரின் மேலே ஏறிச் சென்றார்.

Abspielen

Da sah er Kinder, die auf einer Wiese spielten.

„Warum hast du dieses Ding auf dem Kopf?“ fragten sie,
und er antwortete: „Der König hat mir verboten, die Krone abzunehmen.

Auch beim Spielen soll ich sie tragen.“

Abspielen

அங்கே அவர், சிறுவர்கள் புல்வெளியில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டார்.
„ஏன் நீ இந்தப் பொருளை தலையில் அணிந்துள்ளாய்?“ என்று அவர்கள் கேட்டார்கள்.
அவர் பதிலளித்தார்: „இந்தக் கிரீடத்தை கழற்றுவதற்கு அரசர் எனக்கு தடை விதித்துள்ளார். விளையாடும்போதும் கூட நான் இதை அணிந்திருக்க வேண்டும்.“

 

Abspielen

„So ein Quatsch“, sagten die Kinder. Dieses Wort hatte der Prinz noch nie gehört. „Quatsch“, sagte der Prinz leise. „Quatsch, Quatsch.“

Dann legte er die Krone ins Gras und spielte. Viel leichter fühlte er sich ohne dieses schwere Ding.

Abspielen

„என்ன உளறல்“, என்று சிறுவர்கள் கூறினர். இந்த வார்த்தையை இளவரசர் ஒருபோதும் கேட்டதில்லை. „உளறல்“, என்றார் இளவரசர் மெல்லிய குரலில்.  „உளறல், உளறல்.“
அதன்பின் அவர் கிரீடத்தை புல்லின் மேல் வைத்துவிட்டு விளையாடினார். அந்தப் பாரமான பொருள் இல்லாதிருக்கும் போது அவர் இலகுவாக இருப்பதை உணர்ந்தார்.

Abspielen

Und als der Prinz später nach Hause kam, war er plötzlich ein Stückchen gewachsen.

Der König warf seine Krone in die Luft, sprang vom Thron und schenkte jedermann einen Taler.

Seit der Zeit wuchs der Prinz, denn die Krone drückte ihn nicht mehr so oft. Beim Spielen nahm er sie jetzt nämlich immer ab … und auch sonst manchmal.

Abspielen

அதன் பின்னர் இளவரசர் வீட்டுக்கு வந்தபோது, அவர் திடீரென்று கொஞ்சம் வளர்ந்திருந்தார்.
அரசர் தனது கிரீடத்தைக் கழற்றி வீசினார்.

அரியணையை விட்டுப் பாய்ந்து இறங்கிவந்து அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தங்க நாணயத்தை  அன்பளிப்பாக வழங்கினார்.
கிரீடம் கூட முன்னம்போல் அடிக்கடி அழுத்தவில்லை என்பதால், அப்பொழுதிழுலிருந்து இளவரசர் வளரத் தொடங்கினார். விளையாடும் பொழுதெல்லாம் கிரீடத்தைக் கழற்றினார். அத்துடன் பல்வேறு தருணங்களிலும்……..

 

Abspielen


Ende
 

Abspielen


முற்றும்

Gehe zu:

in Landscape-Ansicht drehen