Abspielen

Moritz malt ein Strichmännchen

 von Achim Bröger

 

Abspielen

மோரிட்ஸ் வரையும் கோட்டு மனிதன்

எழுதியவர்: அஃஹிம் பிரொய்கர்

Illustration: Julius Thesing
Sprecher Deutsch: Stephan Niemand
Übersetzung Tamil: Raha Inthirarajah
Sprecherin Tamil: Thaveswary Tharmaseelan
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0

 

 

Abspielen

Moritz malt ein Strichmännchen.

Seine Mutter findet das langweilig und fragt: „Fällt dir nichts anderes ein?“

 

 

Abspielen

மோரிட்ஸ் ஒரு கோட்டுமனிதனை வரைகின்றான்.

அச்செய்கை தாயாருக்கு சலிப்பாக இருந்ததால்: „உனக்கு வேறு ஏதாவது செய்யத் தோன்றவில்லையா?“ என்று கேட்கிறார்.

Abspielen

„Wieso denn? Strichmännchen sind ganz toll“, meint Moritz.

Weil ihm das Strichmännchen gefällt, malt er ihm eine Sprechblase.
In der steht: „Ich bin nicht langweilig.
Ich bin sogar besonders schön.“

Noch schöner wäre natürlich, wenn es richtig lebendig sein könnte, überlegt Moritz. Dazu murmelt er: „Es soll lebendig sein.“

Abspielen

„ஏன் அப்படி? கோட்டுமனிதர்கள் சிறந்தவர்கள் தானே“, என்று மோரிட்ஸ் எண்ணுகிறான்.
அவனுக்கு கோட்டுமனிதனில் விருப்பம் என்பதனால்,  அதற்கு ஒரு பேச்சுக்குமிழியை வரைகின்றான். அதன் உள்ளே: „நான் சலிப்பானவனல்ல.

நான் விசேடமான அழகை உடையவன்.“ என்று இருக்கிறது.
உண்மையாக இது உயிருள்ளதாக இருக்குமேயானால், நிச்சயமாக இன்னும் அழகாக இருக்கும், என்று மோரிட்ஸ் நினைக்கின்றான்.

அதற்காக அவன் முணுமுணுக்கின்றான்: „ இது உயிருள்ளதாக இருக்க வேண்டும்.“

Abspielen

Daher wundert er sich auch gar nicht, als er aus dem Bild ein Geräusch hört.
Wie der Husten eines Strichmännchens klingt es.

Jedenfalls stellt sich Moritz vor, dass Strichmännchenhusten so klingen müsste.

Ein bisschen raschlig und leise,
irgendwie nach Papier.

Und weil das Männchen hustet, malt ihm Moritz einen Schal um den Hals.

„Warum hustest du nur und sprichst nicht?“

Abspielen

இதனால் அந்தப் படத்திலிருந்து சத்தம் கேட்கும் போது,  அவன் ஆச்சரியப்படவில்லை.
ஓரு கோட்டு மனிதனுடைய இருமலைப் போல அது ஒலிக்கின்றது.
எப்படியும் கோட்டுமனிதனின் இருமல் ஓசை இவ்வாறுதான் இருக்கவேண்டும் என்று யோசித்துப் பார்க்கின்றான்.
எப்படியோ கடதாசித் தாளில் இருந்து வரும் ஓசை கொஞ்சம் சரசரப்பாகவும், சத்தம் குறைவாகவும்  இருக்கும்.

அந்த மனிதன் இருமுவதனால்,  அவனுடைய கழுத்தைச் சுற்றி ஒரு சால்வையை  வரைகின்றான்.
„ஏன் நீ இருமிக்கொண்டு மட்டும் இருக்கின்றாய், கதைக்கவில்லை?“

 

Abspielen

Zwei vorwurfsvolle Punktaugen sehen ihm aus dem Bild entgegen.

Und eine Strichhand zeigt auf einen Strichmund. Ein winziger Strich ist das.

Mit dem kann man nicht reden, höchstens ein bisschen husten.

„Tut mir leid“, entschuldigt sich Moritz.
„Ich mal dir sofort einen passenden Mund.“

Gleich darauf hat das Strichmännchen einen sehr großen, sehr schwungvollen Mund.

„Endlich kann ich reden“, sagt es mit lauter Stimme und spuckt die Sprechblase weg.

Abspielen

படத்திலிருக்கும் பழிவாங்கும் இரண்டு புள்ளிக்கண்கள் அவனைப் பகையுடன் பார்க்கின்றன.
அத்துடன் ஒரு கோட்டுக்கை அந்தக் கோட்டு வாயைக் காட்டுகின்றது.

இது ஒரு சின்னச்சிறு கோடு.

இதனால் பேசமுடியாது, ஆகக்கூடியது கொஞ்சம் இரும முடியும்.
„என்னை மன்னித்துக்கொள்“ என்று மோரிட்ஸ் மன்னிப்புக் கோருகின்றான். „உடனடியாக நான் உனக்கு ஒரு பொருத்தமான வாயை வரைந்து விடுகின்றேன்.“
அதன் பின்  அந்தக் கோட்டுமனிதனுக்கு  மிகப்பெரிய, நன்றாக வளைந்த வாய் ஒன்று கிடைக்கின்றது.
„இறுதியில் என்னால் கதைக்க முடிகிறது“, என்று அது சத்தமான குரலில் கூறிக்கொண்டு, பேச்சுக் குமிழியை துப்பிவிடுகிறது.

Abspielen

Dann nimmt es den Schal ab, springt aus dem Bild und will wissen: „Bin ich wirklich schön genug?“

„Mhh“, murmelt Moritz unsicher.

Das Männchen steht nämlich ein wenig wackelig und ziemlich dünn vor ihm auf dem Tisch.

Moritz holt einen Taschenspiegel.

Als er mit dem Spiegel zurückkommt, stolziert das Strichmännchen groß wie ein Bleistift über den Tisch.

Abspielen

பின்னர் அது சால்வையைக் கழட்டுகின்றது, அப்படத்திலிருந்து வெளியே பாய்ந்து வந்து சிலவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகின்றது: „உண்மையாக நான் போதுமான அழகுடன்  இருக்கின்றேனா?“

„ம்ம்“, என்று சந்தேகத்துடன் மோரிட்ஸ் முணுமுணுக்கின்றான்.
அந்தக் குட்டி மனிதன் அவனுக்கு முன்னால் இருக்கும் மேசைக்கு மேல் சற்றுத் தள்ளாடிய வண்ணம் மிகவும் மெலிந்த தோற்றத்தில் இருக்கின்றான்.
மோரிட்ஸ் ஒரு சிறிய கண்ணாடியை எடுத்து வருகின்றான்.
அவன் கண்ணாடியை எடுத்துக்கொண்டு வரும்போது, பென்சில் அளவுள்ள அந்தக் கோட்டுமனிதன் மேசைக்கு மேலே கர்வத்துடன் நடக்கின்றான்.

  

Abspielen

Es probiert seine Beine aus und schlenkert mit den Armen.

Eigentlich humpelt es ziemlich, muss Moritz zugeben.

Deswegen verlangt es auch: „Jetzt malst du erstmal mein linkes und mein rechtes Bein gleich lang.

Dazu schön kräftig, damit ich schnell laufen kann.

Und dann möchte ich an jeder Hand fünf Finger, nicht links vier und rechts sechs.“

Das klingt alles sehr laut und ziemlich unfreundlich.

  

Abspielen

அவன் தனது கால்களை ஆட்டியும் கைகளை அசைத்தும் பார்க்கின்றான்.
அவன் நன்றாக நொண்டுவதை, உண்மையில் மோரிட்ஸ் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அதனால் அவன்   கட்டளையிடுகின்றான்: „முதலில் நீ எனது இடக்காலையும் வலக்காலையும் ஒரே அளவில் வரைந்துவிடு.

அப்படியென்றால்தான் நான் நல்ல பலத்துடன் வேகமாக  நடக்கலாம்.

அத்துடன் எனது ஒவ்வொரு கையிலும் ஐந்து ஐந்து விரல்கள் வேண்டும், இடக்கையில் நான்கும் வலக்கையில் ஆறும் வேண்டாம்.“

கூறியவை எல்லாம் பெரிய சத்தமாகவும் நட்பில்லாமலும் இருக்கின்றன.

Abspielen

Sofort malt Moritz jetzt alles so, wie es das Strichmännchen haben möchte.

Als sich das Strichmännchen im Spiegel sieht, schimpft es schon wieder: „Was hast du mir denn da für einen Bollerkopf gemalt?

Ich will schön sein, richtig schön, das schönste Strichmännchen überhaupt.“

Abspielen

கோட்டு மனிதன் விரும்பிய அனைத்தையும் மோரிட்ஸ் உடனடியாக வரைகின்றான்.
கோட்டுமனிதன் தன்னைக் கண்ணாடியில் பார்த்துக்கொண்டிருக்கும் போதே அவனைத் திட்டத் தொடங்குகிறான்: „என்ன நீ எனக்கு ஒரு  பானைத்தலையை வரைந்து வைத்திருக்கின்றாய்?
நான் அழகாக, மிகவும் அழகாக, அதுவும் மிகமிக அழகுடைய கோட்டு மனிதனாக இருக்க வேண்டும்.“

 

Abspielen

„Dann bleib liegen“, sagt Moritz, „ich will dich so schön malen, wie ich nur kann.“

Er malt und malt.

Vor Anstrengung hat er einen roten Kopf.

Das Männchen wird wirklich immer schöner.

Er freut sich, und er hofft sogar, dass ihn das Strichmännchen lobt. Wenigstens ein bisschen.

 

Abspielen

„அப்படியென்றால் படுத்திரு, என்னால் இயன்ற அளவு நான் உன்னை அழகுடன் வரைகின்றேன்.“ என்கிறான் மோரிட்ஸ்.

அவன் வரைகின்றான், வரைகின்றான்.
கடின உழைப்பினால் அவனுடைய முகம் சிவக்கின்றது.
உண்மையில் அந்த மனிதன் அழகாக வந்து கொண்டிருக்கின்றான்.

கோட்டு மனிதன் தன்னைப் பாராட்டுவான், என்ற நம்பிக்கையில் அவன் மகிழ்ச்சியடைகின்றான்.
குறைந்தது கொஞ்சம் தன்னும்.

 

Abspielen

Aber das denkt nicht daran.
„Weiß nicht, ob ich schön genug bin“, nörgelt es.

„Warum hast du was an und ich nicht?
So nackt laufe ich nicht mehr herum.
Mal mir einen Anzug.“

Vielleicht friert es, denkt Moritz.
Es hat vorhin gehustet.  

Also malt er einen Anzug.

„Das passende Hemd dazu!“ wird ihm befohlen. „Und Schuhe, Strümpfe, einen Hut. Mal alles, was man als Herr braucht.“

Schließlich hat Moritz auch das geschafft.

Abspielen

ஆனால் அவன் அதைப்பற்றி நினைக்கவேயில்லை. „நான் போதுமான   அழகுடன் இருக்கின்றேனா என்று தெரியவில்லை“, என்று திட்டுகின்றான்.
„நீ எதையோ அணிந்திருக்கின்றாய், ஏன் அது எனக்கில்லை?
இப்படி நிர்வாணமாக என்னால் நடந்துதிரிய முடியாது. எனக்கு ஒரு கோட்சூட்டை வரை!“
சிலவேளை குளிரில் விறைக்கலாம், என்று மோரிட்ஸ் எண்ணுகின்றான்;.
ஏற்கனவே அவன் இருமியிருந்தவன்.
அதனால் அவன் அதற்கு ஒரு கோட்சூட்டை வரைகின்றான்.
„அத்துடன் ஒரு பொருத்தமான சேட்டும்!“ என்று அவனால் கட்டளையிடப்படுன்றது.
அத்துடன் காலணிகள், காலுறைகள், ஒரு தொப்பி. ஓரு மனிதருக்கு என்னவெல்லாம் தேவையோ, அவற்றையெல்லாம் வரை.
முடிவில் மோரிட்ஸ் அவற்றையெல்லாம் வரைந்து முடித்தான்.

Abspielen

Einigermaßen zufrieden dreht sich das Strichmännchen vor dem Spiegel hin und her und verlangt: „Stell mich auf den Teppich.“

Moritz beobachtet den bleistiftgroßen Herrn, der da unten herumstolziert.

Der sieht gar nicht mehr wie ein Strichmännchen aus.

Abspielen

சற்றே திருப்தியுடன் கோட்டுமனிதன் கண்ணாடிக்கு முன்னால் நின்று முன்னும் பின்னுமாக திரும்பிப் பார்த்தபடி அவனிடம் கட்டளையிடுகின்றான்: „என்னை கம்பளத்தின் மேல் இறக்கிவிடு.“
பென்சில் அளவுள்ள அந்த மனிதர் கீழே கர்வத்துடன் நடந்து திரிவதை மோரிட்ஸ் அவதானித்துக் கொண்டிருக்கின்றான்.
இப்பொழுது அவன் கோட்டுமனிதனைப் போல் தோற்றமளிக்கவேயில்லை.

Abspielen

Hab´ alles gemalt, wie er das wollte, denkt Moritz zufrieden.

Da ruft es von unten: „Schön bin ich, kräftig bin ich und schnell genug auch. Jetzt habe ich Zeit für andere Dinge. Mach mir was zu essen. Gänsebraten will ich.“

 
 

Eigentlich ist das klar, denkt der kleine Moritz. Lebendige Strichmänner brauchen was zu essen. Leider kann Moritz nicht mal ein Suppenhuhn malen.

Abspielen

அவன் விரும்பிய அனைத்தையும் நான் வரைந்துவிட்டேன், என்ற திருப்தியுடன் மோரிட்ஸ் யோசிக்கின்றான். கீழே இருந்தபடி அவன் கூறுகின்றான்: „நான் அழகாக இருக்கின்றேன், அத்துடன் பலமாகவும் போதுமான வேகத்துடனும் இருக்கின்றேன். இப்பொழுது என்னிடம் வேறு தேவைகளுக்கு  நேரம் இருக்கின்றது. நான் சாப்பிடுவதற்கு ஏதாவது செய். எனக்கு வாட்டிய வாத்து விருப்பம்.“ உண்மையில் இது நியாயம்தான், என்று சிறியவனான மோரிட்ஸ் நினைக்கிறான். உயிருள்ள கோட்டுமனிதர்கள் உண்பதற்கு ஏதாவது தேவைதான். வருத்தம் என்னவென்றால், மோரிட்ஸால் ஒரு சூப்புக் கோழியைக் கூட வரைய முடியவில்லை.

 
 

Abspielen

Gänsebraten schafft er erst recht nicht.

„Eine Banane könnte ich dir malen“, bietet Moritz an.

„Muss ich eben Banane essen“, stöhnt es.

Moritz überreicht das gelbe Ding.

Der kleine Herr beißt hinein und schreit los: „Die ist ja nicht reif!
Wehe, du machst so was noch mal!

Abspielen

வாட்டிய வாத்தைக் கூட அவனால் வரையச் சரிவரவில்லை. „என்னால் உனக்கு ஒரு வாழைப்பழம் தான் வரைய முடிந்தது“, என்று அதைப் பரிந்துரைக்கின்றான்.

 

„நான் இப்பொழுது வாழைப்பழமா சாப்பிட வேண்டும்“, என்று சினக்கின்றான்.
மோரிட்ஸ் அந்த மஞ்சள் நிறப் பொருளைக் கொடுக்கின்றான்.
அந்தச் குட்டி மனிதர் அதைக் கடித்தபடி கத்தத் தொடங்குகின்றார்: „இது பழுக்கவில்லை!
இப்படியெல்லாம் நீ இன்னொரு தடவை  செய்யக்கூடாது!

  

Abspielen

So … und jetzt will ich Milch,
eine reife Banane und Äpfel.

Einen großen roten Pudding wirst du ja wohl schaffen.

Bratwürste sind auch leicht zu malen.

Dazu eine Bockwurst, Schokolade und Schinken.“

Moritz malt und malt ohne aufzusehen.

„Schneller!“ wird er angefeuert, „das möchte ich größer, das auch.

Das ist nicht schön genug“, hört er.

„Noch eine Bratwurst.
Die war sehr gut, aber bitte mit Senf.“

 

Abspielen

ஆ…. இப்பொழுது எனக்குப் பாலும் பழுத்த வாழைப்பழமும் அப்பிளும் வேணும்.
சிவப்பு நிறத்தில் பெரிய புடிங் ஒன்றை உன்னால் வரைய முடியும் அல்லவா.
வாட்டிய வூஸ்ற்றுகளையும்  இலகுவாக வரையலாம்.
அத்துடன் ஒரு அவித்த வூஸ்ற்றும் சொக்கிலேற்றும் சிங்கினும்.“
மோரிட்ஸ் மேலே பார்க்காமல் வரைந்துகொண்டே இருக்கின்றான்.
„இன்னும் வேகமாக!“  என்று அவர் உற்சாகப்படுத்துகின்றார், „இது எனக்கு பெரிதாக வேண்டும், அதுவும் தான்.
இது போதுமான அழகாக இல்லை“, என்று கூறுகின்றார்.
„இன்னும் ஒரு வாட்டிய வூஸ்ற்.
இது நன்றாக இருக்கிறது, தயவுசெய்து அத்துடன் சென்வ்வும்(கடுகுக்களி).“

Abspielen

„Ich will Möbel“, sagt der kleine Herr jetzt.

Und Moritz malt ein ganzes Zimmer voller Möbel. Das Männchen stolziert auf dem Blatt herum und gibt Anweisungen.

„Diesen Stuhl etwas bequemer. Hier malst du einen Tisch hin.“

Abspielen

இப்பொழுது குட்டி மனிதர்  „எனக்கு தளபாடங்கள் வேணும்“, என்று  கூறுகின்றார்.
மோரிட்ஸ் அறை முழுவதும் நிறையத் தளபாடங்களை வரைகின்றான்.
குட்டி மனிதன் கர்வத்துடன் அங்குமிங்குமாகச் சென்று கட்டளைகளை இட்டுக் கொண்டிருக்கின்றான்.

„இக்கதிரையை கொஞசம் வசதியாக வரை. இவ்விடத்தில் ஒரு மேசையை வரை.“

  

Abspielen

So gut er kann, malt Moritz das alles.

„Na ja“, meint das Männchen dazu, „man muss mit dem zufrieden sein, was man so bekommt.“

Dann setzt es sich zur Probe auf den Stuhl und legt sich ins Bett.

„Ich wünsch mir ein passendes Haus zu den Möbeln.“

 

Abspielen

முடிந்தவரை மோரிட்ஸ் அனைத்தையும் நன்றாக வரைகின்றான்.

 

„ஆ சரி, எது எப்படிக்  கிடைத்தாலும், அதைக் கொண்டு திருப்தியடைய வேண்டியுள்ளது.“ என்று குட்டி மனிதன் எண்ணுகின்றான். பின்னர் அவன் அவற்றை பரீட்சித்துப் பார்க்க கதிரையில் இருந்தும் கட்டிலில் படுத்தும் பார்க்கின்றான். „இத்தளபாடங்களுக்குப் பொருத்தமான வீடு ஒன்றை நான் விரும்புகின்றேன்.“

Abspielen

„So ein großes Stück Papier habe ich nicht“, sagt Moritz.

„Dann kleb zwei Blätter aneinander“, hört er.

Moritz klebt und malt, obwohl er immer weniger Lust hat, etwas für diesen komischen kleinen Herrn zu tun.

Als das Haus fast fertig ist, beschwert der sich schon wieder.

Und weil sich Moritz darüber ärgert, lässt er einfach ein Teil vom Dach offen.

Auch die Sonne, die er schon fertig hat, übermalt er.
Dafür malt er Regenwolken.

Der kleine Herr stolziert herum und merkt gar nichts davon. 

Abspielen

„அதற்கு என்னிடம்  அவ்வளவு பெரிய கடதாசி இல்லை“, என்கிறான் மோரிட்ஸ்.
„அப்படியென்றால் இரண்டு தாள்களை ஒன்றாக ஒட்டு“, என்கிறார் அவர்.
மோரிட்ஸிற்கு நாட்டம் குறைவாக இருந்த போதும், இந்த வேடிக்கையான குட்டி மனிதருக்கு செய்வதற்காக, தாள்களை ஒட்டி வரைகின்றான்.
வீடு முழுமையடையும் போது, மீண்டும் குறை சொல்லத் தொடங்குகின்றார்.
அதனால் ஆத்திரம் அடையும் மோரிட்ஸ், வீட்டுக் கூரையின் ஒரு பகுதியைத் திறந்தபடி விடுகின்றான்.
ஏற்கனவே அவன் வரைந்து முடித்திருந்த சூரியனை, இப்பொழுது மறைத்து வரைகின்றான்.
அதற்குப் பதிலாக அவன் மழைமேகங்களை வரைகின்றான்.
குட்டி மனிதர் அதில் கவனம் செலுத்தாமல் அங்குமிங்குமாக கர்வத்துடன் திரிகின்றார்.

  

Abspielen

„Endlich ist mein Haus fertig. Wird ja auch Zeit“, sagt er.

Dann öffnet er die Tür und ist verschwunden.

Schnell pinselt Moritz Regen auf das Blatt.

 

Abspielen

„ஒருமாதிரி எனது வீடு முடிந்துவிட்டது. இதற்கு நிறைய நேரம் பிடித்திருக்கிறது.“ என்று கூறுகின்றார் அவர். பின்னர் அவர் கதவைத் திறந்து உள்ளே சென்று மறைகின்றார்.
வேகவேகமாக மோரிட்ஸ் அத் தாளின் மேல் தூரிகையினால்  மழையை வரைகின்றான்.

Abspielen

Gleich darauf rennt der kleine Herr aus dem Haus. „Schlamperei!“ schimpft er.

„Da regnet es durchs Dach. Mal es dicht!“

„Mach ich nicht“, sagt Moritz da zum ersten Mal.

„Sofort machst du das!“ befiehlt der kleine Herr.

Moritz schüttelt den Kopf und sagt jetzt:
„Ich tue gar nichts mehr für dich, wenn du nicht freundlicher wirst.“

Jammernd und zeternd steht das Strichmännchen da.

Dann rennt es in sein Haus und wirft die Tür hinter sich zu.

 

Abspielen

இப்பொழுது குட்டிமனிதர் வீட்டுக்கு வெளியே ஓடுகின்றார். „ஒரு ஒழுங்கில்லை!“ என்று திட்டுகின்றார்.

„கூரையினூடாக மழை பெய்கின்றது. அதை மூடிவரை!“

மோரிட்ஸ் முதன்முறையாக : „நான் செய்ய மாட்டேன்“ என்று கூறுகின்றான்.

„உடனடியாக அதைச் செய்!“ என்று கட்டளையிடுகின்றார் அந்தக் குட்டி மனிதர்.

மோரிட்ஸ் தலையை ஆட்டிய வண்ணம் இப்பொழுது கூறுகின்றான்: „நீ நட்புடன் நடந்துகொள்ளாவிடின், இனி நான் உனக்கு ஒன்றும் செய்யமாட்டேன்.“

திட்டிப் புலம்பியபடி அங்கேயே நிற்கின்றான் கோட்டுமனிதன்.

அதன்பின் வீட்டுக்குள் ஓடிச்சென்று கதவைச் சாத்துகின்றான்.

 
 

Abspielen

„Ich hab dich so gut gemalt, wie ich das kann“, sagt der kleine Moritz.
„Besser schaffe ich es nicht.“

Aber aus dem Haus hört er nur empörtes Heulen.

  

Und weil das Moritz ärgert, malt er noch mehr Regen auf das Blatt.

Aufgeweicht und zerlaufen kommt der kleine Herr aus dem Haus.

Abspielen

„என்னால் முடிந்த அளவுக்கு நான் உனக்கு இவ்வளவு நன்றாக வரைந்திருக்கின்றேன்“, என்கின்றான் சிறிய மோரிட்ஸ்.
„இதைவிடச் சிறப்பாக என்னால் செய்ய முடியாது.“
ஆனால் வீட்டிலிருந்து வெளிப்பக்கமாக வரும் அலறல் ஓசையை மட்டும் அவன்   கேட்கின்றான்.
இதனால் கோபமடையும் மோரிட்ஸ், இன்னும் நிறைய மழையைத் தாளில் வரைகின்றான்.
நன்றாக ஊறிக் கரைந்தபடி குட்டி மனிதர் வீட்டுக்கு வெளியே வருகின்றார்.

Abspielen

„Mach mir was zu essen.
Was Warmes zu trinken will ich auch.
Und vor allem malst du mir ein ordentliches Dach.“

Irgendwie hat Moritz Mitleid mit dem Strichmännchen.

Es steht so jämmerlich da.

Deswegen fängt er wieder mit dem Malen an.

„Schneller! Schneller!“ hört er.
„Mal bunter, mal schöner!“ ruft es.

Abspielen

„நான் உண்பதற்கு ஏதாவது செய். எனக்குக் குடிப்பதற்கு சூடாக ஏதாவது வேண்டும். எல்லாவற்றுக்கும் முதல் எனக்கு நீ ஒரு ஒழுங்கான கூரையை வரை.“

 

எப்படியோ மோரிட்ஸ் இந்தக் கோட்டுமனிதனுக்காக இரக்கப்பட வேண்டியுள்ளது.
அங்கே அவன் பரிதாபமாக நிற்கின்றான்.
அதனால் அவன் மீண்டும் வரையத் தொடங்குகின்றான்.
„வேகமாக! வேகமாக!“ என்கிறான் அவன். „வண்ணமயமாகத் தீட்டு! அழகாக வரை!“ என்று கூறுகின்றான் அவன்.

Abspielen

Da stößt der kleine Moritz vor lauter Hast den Wassertopf um.

Wasser läuft über das Papier. Farben zerfließen, alles weicht auf.
Die Farben fließen ineinander.

Das Haus, die Möbel, der Garten, alles ist ein großer Farbfleck.

Abspielen

சிறியவனான மோரிட்ஸ் இந்த அவசரத்தில் தண்ணீர்ப் பாத்திரத்தை தெரியாமல் தட்டிவிடுகின்றான்.
கடதாசி முழுவதும் தண்ணீர் ஓடுகின்றது. நிறங்கள் கரைந்து, அனைத்திலும் ஊறிவிடுகின்றது.
நிறங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வழிகின்றன.
வீடு, தளபாடங்கள், தோட்டம், எல்லாவற்றிலும் ஒரு பெரிய நிறக்கறை ஏற்படுகின்றது.

Abspielen

Moritz zerknüllt sein Bild und wirft es in den Papierkorb. Eigentlich ist er froh, dass das Strichmännchen verschwunden ist.

Als er zu seiner Mutter in die Küche geht, fragt sie: „Wie geht´s deinem Strichmännchen?“

„Nicht so gut“, antwortet er und erzählt, wie das Strichmännchen war und wo es jetzt ist.

 

Abspielen

மோரிட்ஸ் அவனுடைய படத்தை கசக்கி உருட்டி கடதாசிக் குப்பைத்தொட்டியில் எறிகின்றான்.

அந்தக் கோட்டுமனிதன் தொலைந்ததையிட்டு, உண்மையாக அவன் மகிழ்ச்சியடைகின்றான்.

சமையல் அறைக்குள் இருக்கும் அவனுடைய தாயாரிடம் செல்லும்போது, அவர் கேட்கின்றார்: „உன்னுடைய கோட்டுமனிதன் எப்படி  இருக்கின்றான்?“

„நன்றாகவில்லை“, என்று பதில் கூறுகின்றான், பின்னர் கோட்டுமனிதன் எவ்வாறு நடந்து கொண்டான் என்பதையும், இப்பொழுது அவன் எங்கே இருக்கின்றான் என்றும் கூறுகின்றான்.

 

Abspielen

Ende

Abspielen

முற்றும்

Gehe zu:

in Landscape-Ansicht drehen