Abspielen

Tschiep

von Martin Baltscheit

 

Abspielen

Martin Baltscheit

கீச் கீச் கீச்

Fotos: Selma Brand
Sprecher Deutsch: Timo Matzolleck
Übersetzerin und Sprecherin Tamil: Radha Inthirarajah
© Mulingula e.V., lizensiert unter CC BY-NC-ND 4.0

 

Abspielen

Da fällt ein Vogel aus dem Nest. Tschiep!
Auf die Wiese. Unten am See.
Gleich bei den Fröschen.

Quak! Sagen die Frösche.
Tschiep! Sagt der Vogel.
Quak! Quak! Quak! Tschiep! Tschiep! Tschiep!

 

Abspielen

ஒரு நாள் ஒரு குருவி ஒன்று கூட்டில் இருந்து கீழே விழுந்தது. கீச்! புல்வெளியில். ஏரிக் கரையில். தவளைகளுக்கு அருகில்.

குவாக்! தவளைகள் கத்தின.
கீச்! குருவி கீச்சிட்டது.
குவாக்! குவாக்! குவாக்! கீச்! கீச! கீச்!

Abspielen

Die Frösche denken: Für eine Fliege ist er zu groß, für einen Storch zu klein.
Der Vogel denkt: Für einen Wurm sind sie zu groß und
für eine Mama singen sie zu schlecht.
Der kleine Vogel zeigt ihnen, wie es richtig geht: Tschiep!

Aber die Frösche verstehen ihn nicht.
Quak! Quak! Quak!
Und der Vogel versteht die Frösche nicht.
Tschiep! Tschiep! Tschiep!

Abspielen

தவளைகள் நினைத்துப் பார்த்தன. இது ஈயை விட மிகவும் பெரியது. கொக்கை விட மிகவும் சிறியது. குருவி நினைத்துப் பார்த்தது: இவை புழுக்களை விட மிகவும் பெரியவை.  

அம்மாவைப் போல் நன்றாகப் பாடவும் இல்லை. அந்தச் சிறிய குருவி சரியாக எப்படிப் பாடுவது என தவளைகளுக்குப் பாடிக் காட்டியது.  கீச்!

ஆனால் அத்தவளைகளுக்கு அது விளங்கவில்லை. குவாக்! குவாக்! குவாக்! அந்தக் குருவிக்கும் தவளைகளைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கீச்! கீச்! கீச்!

Abspielen

Da macht der Vogel etwas Verrücktes. Quak!
Und die Frösche schweigen.
So einen Frosch haben sie noch nicht gesehen.
So einen Frosch gibt es doch gar nicht.

Da macht einer der Frösche etwas Verrücktes: Tschiep!

Und die anderen Frösche machen mit: Tschiep! Tschiep! Und der Vogel ruft: Quak! Quak!  Und die Frösche singen: Tschiep! Tschiep! Tschiep! Und der Vogel ruft: Quak! Quak! Quak! Quak!

Abspielen

திடீரென அக்குருவி விசித்திரமான ஒரு செயலைச் செய்தது.குவாக்! உடனே தவளைகள் அமைதியாகின. அவை இப்படி ஒரு தவளையை இதற்கு முன் பார்த்ததேயில்லை.

இப்படி ஒரு தவளை இதுவரை இருந்ததேயில்லை.

அப்பொழுது தவளை ஒன்று விசித்திரமான ஒரு செயலைச் செய்தது. கீச்!

ஏனைய தவளைகளும் சேர்ந்து கீச்சிட்டன. கீச்! கீச்! குருவியும் கத்தியது. குவாக்! குவாக்! தவளைகளும் கீச்சிட்டன. கீச்! கீச! கீச்! குருவி கத்தியது. குவாக்! குவாக்! குவாக்!

Abspielen

Das ganze Durcheinander hört der Storch.
Er landet mit breiten Flügelschlägen und hat Hunger.
Aber die Frösche singen wie Vögel.
Und der Vogel quakt wie ein Frosch.
Da versteht der Storch die Welt nicht mehr und fliegt davon.

Jetzt jubeln die Frösche. Ab heute werden sie singen, wenn der Storch kommt. Tschiep! Tschiep! Tschiep! Und sie werden es den anderen Fröschen sagen.

Tschiep! Tschiep! Tschiep! So hüpfen sie alle davon.

Abspielen

இவற்றின் இந்த விசித்திரத்தை கொக்கு ஒன்று கேட்டுக்கொண்டிருந்தது. அது சிறகுகளை அடித்தவண்ணம் கடும் பசியுடன் அவ்விடத்தை வந்தடைந்நதது.

ஆனால் அங்கு தவளைகள் குருவிகளைப் போல் கீச்சிட்டவண்ணம் இருந்தன. அந்தக் குருவியும் தவளையைப் போல் கத்திக் கொண்டிருந்தது.என்னால் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை, எனஎண்ணியபடி கொக்கு அங்கிருந்து பறந்து சென்றது. இதைக்கண்ட தவளைகள் மகிழச்சியில் துள்ளிக் குதித்தன. அன்றிலிருந்து கொக்கு வரும்போதெல்லாம் தவளைகள் கீச்சிட்டுக்கொண்டேயிருந்தன. கீச்! கீச்! கீச்! இத்தவளைகள் அங்கு வாழ்ந்த ஏனைய தவளைகளுக்கும் கூறின. கீச்! கீச்! கீச்!  அத்தவளைகள் துள்ளிக் குதித்தபடி அங்கிருந்து சென்றன.

Abspielen

Der kleine Vogel sitzt alleine auf der Wiese.
Quak. Der Baum ist voller Blätter.
Der Schatten voller Wiese.
In der Wiese geht etwas.

Raschel. Raschel. Schnuff. Ein Hund sucht brauchbare Sachen. Quak! Sagt der Vogel. Wuff! Sagt der Hund. Und braucht keinen Vogelfrosch. Schnuff. Schnuff. Raschel. Raschel ... Weg ist er.

Abspielen

அந்தச் சிறிய குருவி தன்னந்தனியே புல்வெளியில் இருந்தது.குவாக்! மரம் முழுவதும் இலைகள் படர்ந்திருந்தன. மரத்தின் நிழல் புல்வெளி முழவதும் பரந்திருந்தது. புல்வெளியில் ஏதோ ஒன்று நடந்துகொண்டிருந்தது.

சர! சர! நாய் ஒன்று உணவைத் தேடி அலைந்துகொண்டிருந்தது. குவாக்! குருவி கத்தியது. வள்! நாய் குரைத்தது. நாய்க்கு தவளைக்குருவி தேவைப்படவில்லை. சர! சர! நாய் அங்கிருந்து சென்றுவிட்டது.

Abspielen

Die Katze kann einen kleinen Vogel sehr gut gebrauchen. Zum Spielen: Wurfball. Tretkissen. Lumpensack. Katzen jonglieren auch gern. Mit zwei, drei oder vier Pfoten.

Haben sie genug gespielt, wollen sie fressen und  fahren ihre Krallen aus.

Wuff! Sagt der kleine Vogel. Miau! Schreit die Katze und springt auf den Baum.

Wuff! Sagt der Vogel noch einmal und fletscht seine Zähne. Wuff! Wuff! Wuff!

Abspielen

பூனை ஒன்றிற்கு அந்தச் சிறிய குருவியின் உதவி தேவைப்பட்டது.எதற்கு? விளையாடுவதற்கு, பந்தெறிவதற்கு, தலையணையை உதைத்து விளையாடுவதற்கு. 

பூனைகளுக்கு பந்துகளை மேலே எறிந்து, எறிந்து பிடிக்கும் விளையாட்டு நன்றாகப் பிடிக்கும். இரண்டு மூன்று நான்கு கால்களாலும் விளையாடும்.

விளையாடி முடிந்ததும், அவற்றுக்குப் பசி எடுக்கும். உடனே தனது கால்விரல் நகங்களை விரித்துக் கொள்ளும்.

வள்! எனக் குரைத்தது குருவி. மியாவ்! கத்தியபடி மரத்தின் மேல் பாய்ந்து ஏறியது பூனை. வள்! எனக் குரைத்தது குருவி.

 

Abspielen

Da fliehen auch die Enten und Schwäne und alle Igel ducken sich.

Nur eine Schnecke verfolgt ihr Ziel. Langsam. Der kleine Vogel ist ganz ihrer Meinung: Leben und Leben lassen.

 

Abspielen

இதைக் கேட்ட வாத்துக்களும் அன்னங்களும் பயந்து ஓடின.

முள்ளம்பன்றிகள் தம்மை சுருட்டிக் கொண்டன. ஓரு நத்தை மட்டும் தனது இலக்கை நோக்கி மெல்ல மெல்லச் சென்று கொண்டிருந்தது. „வாழ விடுவதுதான் வாழ்க்கை“ "என்பதை அந்தச் சிறிய குருவி நினைத்துக் கொண்டது.

Abspielen

Kikeriki – ruft jemand um Hilfe. Kikeriki!
So klingt die große Not. Der Vogel läuft.
Er fliegt. (Fast.) Kikerikiii! Da steht ein Hahn auf dem Mist und sein Kopf brennt – irgendwie. Tschiep! Tschiep! Tschiep!

Da lacht der Hahn. Tschiep? Tschiep? Tschiep?
Er kämmt sein rotes Haar und steigt herab. Tschiep, tschiep, tschiep ... Soll das eine Sprache sein?

Kikerikiiii!!! Dann geht er frühstücken.

Abspielen

கொக்கரக்கோ! யாருக்கோ உதவி தேவைப்பட்டது. பெரும் ஆபத்துப் போல் இருந்தது. குருவி ஓடியது. மெதுவாகப் பறந்தது. கொக்கரக்கோ!

அங்கே ஒரு சேவல் எருக்களின் மேல் ஏறி நின்றது. 

அதனுடைய தலை எரிவது போல் இருந்தது.  கீச்! கீச்! கீச்!

இதைக் கேட்ட சேவல் சிரித்தது.  கீச்! கீச்! கீச்! தனது சிவப்பு இறகுகளை உலுப்பிய வண்ணம் கீழே இறங்கியது. கீச்! கீச்! கீச்! இது ஒரு மொழியா? கொக்கரக்கோ!

அது காலை உணவை உண்ணச் சென்றது.

Abspielen

Die Sonne wärmt wie eine Mutter. Der kleine Vogel weiß nicht wohin. Hier ist er noch nie gewesen.

Die Welt ist voller Niegewesen.

Quak! Sagt der Vogel. Wuff! Und: Miau. Als wirklich keiner kommt, ruft er sogar: Kikeriki!

Aber die Welt ist ohne Farbe. Der Himmel voller Wolken. Die Erde ohne Freunde. Quak! Wuff! Miau! Quak! Wuff! Miau! Quak! Wuff! Miau!

Abspielen

சூரிய வெப்பமானது தாய்ச் சூட்டில் இருப்பது போல் இருந்தது. அந்தச் சிறிய குருவிக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. ஓருநாளும் அது இந்த இடத்திற்கு வரவேயில்லை.

இதுவரை பார்த்திராத உலகம் போல் இருந்தது.

குவாக்! எனக் கத்தியது. வள்! பின் மியாவ்! உண்மையில் ஒருவரும் வரவில்லை என்றவுடன் இவ்வாறு கூடக் கூப்பிட்டது. கொக்கரக்கோ!

இந்த உலகம் நிறமற்றதாகக் காட்சியளித்தது. ஆகாயம் முழவதும் முகிற் கூட்டமாக இருந்தது. பூமி முழவதும் நண்பர்கள் இல்லை. குவாக்! வள்! மியாவ்! குவாக்! வள்! மியாவ்! குவாக்! வள்! மியாவ்!

Abspielen

Das hört ein Esel. Und bewundert ihn.
Der Esel kann nur eine Sprache. Und darin bloß ein Wort: I-ah! 

Der Vogel hört den Esel schreien. I-ah!

Er sieht das fremde Tier und seine Augen fragen: Kannst du mir helfen? I-ah! Schreit der Esel.
Weißt du, wo ich wohne? I-ah! Schreit der Esel. 
Und kann ich mit dir gehen?

Abspielen

இதைக் கழுதை ஒன்று கேட்டது. குருவியைக் கண்டு வியப்படைந்தது. கழுதைக்கு ஒரு மொழி மட்டும் தான் தெரியும். அதிலும் ஒரு வார்த்தை தான் தெரியும். ஈ.......ஆ..............

கழுதை கத்தியது குருவிக்குக் கேட்டது. ஈ.......ஆ..............

குருவி அந்த அந்நிய மிருகத்தைக் கண்டது.அதனுடைய கண்களால் கேள்வி ஒன்றைக் கேட்டது. உன்னால் எனக்கு உதவி செய்ய முடியுமா? ஈ.......ஆ..............என்று கழுதை கத்தியது. நான் வாழும் வீடு எங்கே உள்ளது என்று உனக்குத் தெரியுமா? ஈ.......ஆ..............என்று கழுதை கத்தியது. உன்னுடன் நான் வரலாமா?

Abspielen

I-ah! Schreit der Esel und geht hinunter zum Fluss, weil er vom Schreien durstig ist.

Der kleine Vogel folgt ihm. Und der Esel freut sich darüber. Er mag fremde Sprachen.

Tschiep. Tschiep. Wuff. Wuff. I-ah!
Tschiep. Tschiep. Wuff. Wuff. Tirili! Tirila!

Der kleine Vogel bleibt stehen. Der Esel auch. Da ruft ein anderer Vogel! Unten am See. Gleich bei den Fröschen. Wer das wohl ist?

Abspielen

ஈ.......ஆ...........… எனக் கத்தியபடி கழுதை ஏரிக்கரையை நோக்கிச் சென்றது.

அந்தச் சிறிய குருவியும் அதைப் பின் தொடர்ந்து சென்றது. இதைக் கண்ட கழுதை மகிழ்ச்சியடைந்தது. 

அதற்கு வேற்று மொழிகள் என்றால் விருப்பம்.

கீச்! கீச்! வள்! வள்! ஈ! …... ஆ!…..   
கீச்! கீச்! வள்! வள்! லல்! லல்! லா!

சிறிய குருவி நின்றது. அந்தக் கழுதையும் நின்றது.  இன்னும் ஒரு குருவி கீச்சிட்டது. ஏரிக் கரையில். தவளைகளுக்கு அருகில். அது யாராக இருக்கலாம்?

 

 

Abspielen

Wuff

 

 

 

Abspielen

வள்

Ende

முற்றும்

Gehe zu:

in Landscape-Ansicht drehen